ஒரே நகரத்திற்குள் தேவைப்படும் தளவாட சேவைகளை, ஜொமாட்டோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்ட்ரீம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை, விற்பனையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சல் சேவைகள் துறையில் ஜொமாட்டோவின் புதிய அறிமுகம் எக்ஸ்ட்ரீம் ஆகும். இதன் மூலம், விற்பனையாளர்கள், பார்சல் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கலாம். ஒரே நகரத்திற்குள் மட்டுமே இந்த எக்ஸ்ட்ரீம் தளவாட சேவை ஜொமாட்டோவால் வழங்கப்படுகிறது. சுமார் 10 கிலோ எடையுள்ள பார்சலுக்கு 35 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் மட்டுமே எக்ஸ்ட்ரீம் அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐபோன்களில் விரைவில் இது அறிமுகம் செய்யப்படும் என ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.