ஷிப்ரோகெட் நிறுவனத்தை கையகப்படுத்த 16,600 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு ஜொமாட்டோ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜொமாட்டோ நிறுவனம் ஷிப்ரோகெட் நிறுவனத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிறுவனத்தை கையகப்படுத்த ஜொமாட்டோ விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஷிப்ரோகெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஜொமாட்டோ நிறுவனம், தற்போது அதனை கையகப்படுத்த உள்ளது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படுகிறது. ஜொமாட்டோ நிறுவனர் தீபேந்தர் கோயல், ஷிப்ரோகெட் நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ள நிலையில், இந்த கையகப்படுத்தல் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














