ஜொமாட்டோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 175 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 188 கோடி மதிப்பில் இழப்பு பதிவாகி இருந்தது. மேலும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபத்தில் 27% உயர்வு பதிவாகியுள்ளது. அதன்படி, ஓராண்டில் ஜொமாட்டோ நிறுவனம் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், ஜொமாட்டோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 3562 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 73% உயர்வாகும். அத்துடன், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 8.3% உயர்வாகும். இந்த நிதிநிலை அறிக்கை வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 7% அளவுக்கு ஜொமாட்டோ பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.