ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில், ஜோமாட்டோ நிறுவனம் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தது. இதனால், நவம்பர் 11ஆம் தேதி, ஜோமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் 13% உயர்ந்தன.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், ஜோமாட்டோ நிறுவனத்தின் நிகர இழப்பு 250.8 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டில், 434.9 கோடியாக இருந்தது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 1661.3 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1024.2 கோடியாக இருந்தது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான செலவுகள் 2091.3 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த வருடத்தில் இது 1601.5 கோடியாக இருந்தது. இந்த அறிவிப்புகள் வெளியானதால், நேற்று 63.95 ரூபாயாக இருந்த நிறுவனத்தின் பங்கு விலை, இன்று காலை 72.25 ஆக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இது 13% உயர்வாகும்.