நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ, தனது இன்டர்சிட்டி உணவு விநியோக சேவையான லெஜன்ட்ஸ் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், “லெஜண்ட்ஸ் சேவைக்கு சரியான சந்தை பொருத்தம் கிடைக்கவில்லை என்பதால், இந்த சேவையை உடனடியாக நிறுத்துகிறோம்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2022 இல் இந்தியாவின் 10 பெருநகரங்களில் இருந்து உணவு வழங்கும் வகையில் லெஜண்ட்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும், ஜூலை மாதத்தில் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ₹5,000 என நிர்ணயித்தது போன்ற பல மாற்றங்களைச் செய்து, பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. இறுதியில், சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில், ஜொமாட்டோ தனது 'எக்ஸ்ட்ரீம்' பார்சல் சேவையையும் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.














