உணவு விநியோகத் துறையில் முன்னணியில் உள்ள ஸ்விக்கி மற்றும் ஜொமோட்டோ ஆகிய நிறுவனங்கள், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்த வேண்டி உள்ளதாக ஜிஎஸ்டி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரிகளை பல்வேறு நிறுவனங்கள் முறையாக பின்பற்றாமல் உள்ளன. இவற்றுக்கு ஜிஎஸ்டி இயக்குனரகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த வகையில், ஸ்விக்கி நிறுவனம் 350 கோடி அளவிலும், ஜொமோட்டோ நிறுவனம் 400 கோடி அளவிலும் ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல், ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற நிறுவனங்கள் 5% ஜிஎஸ்டி வரி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.