முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர் சென்றார். சத்துவாச்சாரியில் காலை உணவு திட்டத்தையும் கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர்.