செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க திட்டம் - ஜூம் நிறுவனம்

March 1, 2023

வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வரும் ஜூம் நிறுவனம், தனது தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முடிந்தவரை ஒருங்கிணைக்க திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது. அத்துடன், 2024 ஆம் நிதி ஆண்டுக்கான லாபம், கருத்துக்கணிப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பங்குச் சந்தையில் இதன் மதிப்பு 8% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்திற்கான இன்றியமையாத தேவை என்பதை அறிந்து ஜூம் நிறுவனம் செயல்படத் துவங்கி உள்ளதாக […]

வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வரும் ஜூம் நிறுவனம், தனது தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முடிந்தவரை ஒருங்கிணைக்க திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது. அத்துடன், 2024 ஆம் நிதி ஆண்டுக்கான லாபம், கருத்துக்கணிப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பங்குச் சந்தையில் இதன் மதிப்பு 8% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்திற்கான இன்றியமையாத தேவை என்பதை அறிந்து ஜூம் நிறுவனம் செயல்படத் துவங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் லாபம், ஒரு பங்குக்கு 4.11 முதல் 4.18 டாலர்கள் வரை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஜூம் நிறுவனம், செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்யத் துவங்கி இருக்கும் அதே வேளையில், செலவுகளைக் குறைக்கும் விதமாக, பிப்ரவரி மாதத்தில் ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu