இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன்களை குறிவைக்கும் சோவா வைரஸ்

September 16, 2022

இந்தியாவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை குறிவைத்து பரவி வரும் சோவா வைரஸ் மூலமாக வங்கி கணக்கில் இருக்கும் பணம் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இணையத்தளத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட் போன் பயன்பாடும் அதன் வழியாக வங்கி சார்ந்த பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதன் மூலமாக சைபர் தாக்குதல்கள் அதிகளவில் நடக்க வாய்ப்பு இருக்கும் ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது. சோவா என்ற வைரஸ் அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் […]

இந்தியாவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை குறிவைத்து பரவி வரும் சோவா வைரஸ் மூலமாக வங்கி கணக்கில் இருக்கும் பணம் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இணையத்தளத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட் போன் பயன்பாடும் அதன் வழியாக வங்கி சார்ந்த பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதன் மூலமாக சைபர் தாக்குதல்கள் அதிகளவில் நடக்க வாய்ப்பு இருக்கும் ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது.

சோவா என்ற வைரஸ் அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் அதிகளவில் பரவி வருகிறது. போலி செயலிகள் மூலமாக ஒருவரின் ஸ்மார்ட் போனில் களமிறங்கும் இந்த வைரஸ் வங்கி விவரங்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடுகிறது. இதனால், வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும் அபாயம் எழுந்துள்ளது. மேலும், கேமராவில் தானாக வீடியோ பதிவு செய்வது போன்ற தனிப்பட்ட அந்தரங்க தகவல் திருட்டு, இந்த வைரஸ் மூலம் நடக்கலாம்.

இந்த சோவா வைரஸ் 200க்கு மேற்பட்ட செயலிகளை குறிவைத்து செயல்படுவதால் அதிகாரபூர்வ தளத்தில் மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு அறிவுறுத்தியுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu