நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதில் திமுக உடனான கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் அணி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.