மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில் விரைவில் சர்வதேச விமான சேவை தொடங்கும் என திரிபுர முதல்வர் தெரிவித்துள்ளார்.
நவீன திரிபுராவின் கட்டடக் கலைஞர் மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மாணிக்யா பகதூரின் வெண்கலச் சிலையை திரிபுரா முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் அவர் திரிபுராவின் வளர்ச்சியில் மாணிக்க வம்சத்தினருக்கு பங்களிப்பு இருப்பினும் அவர்களுக்கான உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பாஜக ஆட்சி வந்த பிறகு திரிபுராவின் மகாராஜாக்கள் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் சிங்கர்பில் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அது எம் பிபி விமான நிலையம் என மறு பெயரிடப்பட்டது. தற்போது இந்த அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் 32 விமானங்கள் புறப்படுகின்றன. விரைவில் இந்த விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.