உக்ரைன் போருக்காக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறது.
ரஷ்யாவுடனான போருக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை பெற்று வருகிறது உக்ரைன். ஆனால் ரஷ்யா இந்த போருக்காக தன்னுடைய சொந்த வளங்களையே நம்பியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா போருக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இதன்காரணமாக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த முயற்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கி 6 மாதம் ஆகியுள்ளது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு பெரிய அளவில் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கான தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் வணிகக் கப்பலை பயன்படுத்தி ராணுவ ஆயுதங்களை அதில் இறக்குமதி செய்ய ரஷ்யா முயற்சித்துள்ளதை ஐரோப்பிய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த மாதம் சிரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு வணிக கப்பல் ஒன்று ராணுவ வாகனங்களை ஏற்றி சென்றது. ஸ்பார்த்த 2 எனப்படும் இந்த வணிக கப்பலில் குறைந்தது 11 ராணுவ வாகனங்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எனினும் இந்த தகவலை ஐரோப்பிய உளவுத்துறை ரகசியமாக வைத்துள்ளது.