சீனாவின் கடன் பிடியில் சிக்கிக் கொண்ட லாவோஸ்

August 10, 2022

கிழக்காசிய நாடான லாவோஸ், வெளிநாட்டு கடன்களில் மூழ்கியுள்ளது. குறிப்பாக சீனாவிடம் இருந்து நிறைய கடன் பெற்றுள்ளதால், அந்நாட்டின் கடன் பிடியில் தற்போது லாவோஸ் சிக்கி உள்ளது. உள்நாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, பல நாடுகளில் இருந்தும் கடன் பெற்ற லாவோஸ் நாடு, தற்போது கடனில் மூழ்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு, லாவோஸ் நாட்டின் மொத்த பொதுக்கடன் 88% உயர்ந்துள்ளது. அந்நாட்டின் மொத்த கடன் தொகை 14.5 பில்லியன் அமெரிக்க […]

கிழக்காசிய நாடான லாவோஸ், வெளிநாட்டு கடன்களில் மூழ்கியுள்ளது. குறிப்பாக சீனாவிடம் இருந்து நிறைய கடன் பெற்றுள்ளதால், அந்நாட்டின் கடன் பிடியில் தற்போது லாவோஸ் சிக்கி உள்ளது.

உள்நாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, பல நாடுகளில் இருந்தும் கடன் பெற்ற லாவோஸ் நாடு, தற்போது கடனில் மூழ்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு, லாவோஸ் நாட்டின் மொத்த பொதுக்கடன் 88% உயர்ந்துள்ளது. அந்நாட்டின் மொத்த கடன் தொகை 14.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகையில் பாதி அளவிற்கும் மேல், சீனாவிடம் இருந்து பெற்ற கடன் ஆகும். முக்கியமாக லாவோஸ் மற்றும் சீனா ஆகியவற்றை இணைக்கும் 418 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில்வே லைன் திட்டத்திற்கு லாவோஸ் அதிகக் கடன் பெற்றுள்ளது. இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாகும் இந்த ரயில்வே திட்டத்தில் சீனாவிற்கு 70% பங்கும், லாவோஸ் நாட்டிற்கு 30% பங்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போதே, வெளிநாட்டு வல்லுனர்கள் பலரும் இந்தத் திட்டத்தால் லாவோஸ் நாட்டிற்கு அதிகப் பயன் இல்லை என்று விமர்சித்தனர். ஆனால் அந்நாடு, “இந்த ரயில்வே இணைப்பின் மூலமாக சீனா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணையும் நிலை உள்ளதால், பயணம் மூலமாகவும் சுற்றுலா மூலமாகவும் வருவாய் கிடைக்கும்” என்று கருதியது. மேலும், தனித்த பொருளாதாரம் கொண்ட அந்நாட்டின் வர்த்தகத் தொடர்பு வெகு தொலைவில் உள்ள ஐரோப்பா வரை நீடிக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், அதற்கு மாறாக, அந்நாடு தற்போது கடனில் மூழ்கியுள்ளது. இந்த ரயில்வே திட்டத்திற்காக மட்டுமே சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாவோஸ் கடனாக பெற்றுள்ளது. அத்துடன், இந்தத் திட்டம் தொடர்பாக, பல சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக ரயில்வே வழித்தடங்களில் இருந்த வீடுகளை அப்புறப்படுத்திய போது அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், அந்த ரயில்வே பாதை பல அரிய வகை உயிரினங்களின் வாழிடங்களை அழித்துள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. உலக வங்கியின் கணிப்பு படி, லாவோஸ் நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தில் இறுதியில் 3.8% உயரும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், கடனில் மூழ்கியுள்ள நாட்டை மீட்பதற்கு போதிய அளவிலான வளர்ச்சியாக இது இருக்காது என்றும் கூறியுள்ளது. இதனால், சீனாவின் கடன் பிடியில் சிக்கும் நாடுகளின் வரிசையில் லாவோஸ் இணையும் அபாயம் நேர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu