செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக மீண்டும் நீட்டிப்பு

January 4, 2024

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் கோரி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜாமின் மனுவை சென்னை ஹைகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால் தற்போது உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என சுப்ரீம் […]

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் கோரி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜாமின் மனுவை சென்னை ஹைகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால் தற்போது உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து செந்தில் பாலாஜி கீழ் கோட்டை நாடலாம் எனவும் அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் 14வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காணொளி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். இதில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu