தூத்துக்குடி அனல் மின் நிலையம், ராக்கெட் ஏவுதளம் பணி தாமதம்

December 27, 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் அனல்மின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தன. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூபாய் 9250 கோடி மதிப்பில் 1301 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து முடிவடையும் நிலையில் இருந்தது. இதில் கப்பலில் வரும் நிலக்கரியை எதிர்ப்புறம் உள்ள அணுமின் நிலையத்திற்கு நேரடியாக கொண்டு வருவதற்கு உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. மேலும் உயர்மட்ட மின்சார கோபுரம் அமைக்கும் […]

தூத்துக்குடி மாவட்டத்தில் அனல்மின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தன.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூபாய் 9250 கோடி மதிப்பில் 1301 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து முடிவடையும் நிலையில் இருந்தது. இதில் கப்பலில் வரும் நிலக்கரியை எதிர்ப்புறம் உள்ள அணுமின் நிலையத்திற்கு நேரடியாக கொண்டு வருவதற்கு உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. மேலும் உயர்மட்ட மின்சார கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெற்று பணிகள் அனைத்தும் 80% முடிவடைந்து 2025 தினம் திறப்பதற்காக அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றன. இதே போல குலசேகரம் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு முதல் கட்டமாக 6 கோடியே 24 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக அணுமின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளத்திற்கு வர வேண்டிய மூலப்பொருள்கள் வெளியில் இருந்து கொண்டு வர முடியாத காரணத்தினால் பணிகள் தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த இரண்டு திட்ட விழாக்களும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu