தமிழகத்தின் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஏற்கனவே அறிவித்தபடி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.