சக மனிதர்கள் மேன்மைக்காக சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக தினத்தந்தி குழும இயக்குனர் ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணன் மூர்த்தி "பெல்லோ சிட்டிசன்" (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த அமைப்பு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவரை அடையாளம் கண்டனர்.
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆற்றுப்படை அறக்கட்டளை தெரிவித்துள்ளது சக மனிதர்கள் மேன்மைக்காக சமூக நலனின் அக்கறை கொண்ட இளைஞர்கள் ஊக்குவிப்பதற்காக தினத்தந்தி குழும இயக்குனர் ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணன் மூர்த்தி பெல்லோ சிட்டிசன் சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள் அந்த அமைப்பு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உத்வேகமும் ஆர்வமும் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது அந்த வகையில் சென்னை சேர்ந்த மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவரும் ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் பெல்லோ சிட்டிசன் தொண்டு நிறுவனம் மூலம் அடையாளம் காணப்பட்டார்.
மருத்துவ மருத்துவ படிப்புகளுக்கு தயாராகும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான அனைத்து விதமான பயிற்சிகளையும் கார்த்திகேயன் இலவசமாக வழங்கி வருகிறார். இது தொடர்பான திட்டங்களை பெல்லோ சிட்டிசன் தொண்டு நிறுவனத்திடம் கூறி அவர் தற்போது உதவிகளை பெற்று வருகிறார். ஆற்றுப்படை அறக்கட்டளை நீட் தேர்வு இலவசமாக பயிற்சி அளிப்பதற்கான முதல் ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இப்போது இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதில் சேருவதற்கு ஆற்றுப்படை பவுண்டேஷன் டாட் காம் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்வதற்கு13 ஆம் தேதி கடைசி நாள்.
சென்னையில் வருகிற 21 ஆம் தேதி தேர்வு நடக்கிறது. அன்றைய தினம் தேர்வு முடிந்த பின்னர் மருத்துவ கலந்தாய்வு மற்றும் துணை மருத்துவ படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். செயற்கைத் தேர்வு குறித்து சந்தேகங்களை 9363368271, 9363354173 என்ற whatsapp என் மூலம் கேட்டு கொள்ளலாம் என்று ஆற்றுப்படை அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














