பெரும்பாலான விபத்து மரணங்களுக்கு அதிக வேகமே காரணம்: மத்திய அரசு அறிக்கை

September 7, 2022

பெரும்பாலான விபத்து மரணங்களுக்கு அதிக வேகமே காரணம் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. '2020-ம் ஆண்டில் சாலை விபத்துகள்' என்ற தலைப்பில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2020-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், அதிவேகம் காரணமாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 343 விபத்துகள் நடந்துள்ளன. அதில், , 91 ஆயிரத்து 239 பேர் இறந்துள்ளனர். மேலும், தவறான திசையில் வாகனம் ஓட்டியதால், 20 ஆயிரத்து 228 விபத்துகள் ஏற்பட்டு, […]

பெரும்பாலான விபத்து மரணங்களுக்கு அதிக வேகமே காரணம் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

'2020-ம் ஆண்டில் சாலை விபத்துகள்' என்ற தலைப்பில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2020-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், அதிவேகம் காரணமாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 343 விபத்துகள் நடந்துள்ளன. அதில், , 91 ஆயிரத்து 239 பேர் இறந்துள்ளனர்.

மேலும், தவறான திசையில் வாகனம் ஓட்டியதால், 20 ஆயிரத்து 228 விபத்துகள் ஏற்பட்டு, 7 ஆயிரத்து 332 மரணங்களும், 'சீட் பெல்ட்' அணியாததால், 15 ஆயிரத்து 146 மரனங்களும், போதையில் வாகனம் ஓட்டியதால், 8 ஆயிரத்து 355 விபத்துகள் ஏற்பட்டு, 3 ஆயிரத்து 322 மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

மொபைல் போன் பயன்படுத்தியதால் 6 ஆயிரத்து 753 விபத்துகள் ஏற்பட்டு, 2 ஆயிரத்து 917 மரணங்களும், ஹெல்மெட் அணியாததால் 30.1 சதவீத மரணங்களும் ஏற்பட்டுள்ளது. மொத்த விபத்து உயிரிழப்புகளில் 69.3 சதவீதம் அதிவேகம் காரணமாக ஏற்பட்டுள்ளது ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu