ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு

August 17, 2022

திண்டுக்கலில் 12 கோடி மதிப்புடைய 5 வெண்கல சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். திண்டுக்கல்லில் ரூ.12 கோடி மதிப்பிலான 5 சிலைகள் விற்கப்படுவதாக கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் சென்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். அங்கு பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 வெண்கலச் சிலைகளை மீட்டனர். இது தொடர்பாக பால்ராஜ், இளவரசன், பிரபாகர், தினேஷ் குமார் ஆகிய […]

திண்டுக்கலில் 12 கோடி மதிப்புடைய 5 வெண்கல சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் ரூ.12 கோடி மதிப்பிலான 5 சிலைகள் விற்கப்படுவதாக கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் சென்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். அங்கு பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 வெண்கலச் சிலைகளை மீட்டனர்.

இது தொடர்பாக பால்ராஜ், இளவரசன், பிரபாகர், தினேஷ் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் சிலைகள் திண்டுக்கல், வடமதுரையில் உள்ள ஆதிநாத பெருமாள் ரங்க நாயகி கோயிலில் கடந்த ஆண்டு கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து வெண்கல சிலைகளை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu