இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் 1.4 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை புரிந்துள்ளன.
அண்மையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை, 1.4 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் முக்கிய தூதரகம் மற்றும் இதர துணை தூதரகங்கள் இணைந்து மாணவர் விசாக்களை வழங்கி உள்ளன. இது புதிய சாதனை” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் மொத்தம் 10 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் சுற்றுலா சார்ந்து 8 லட்சம் விசாக்களும், மாணவர்களுக்கு 6 லட்சம் விசாக்களும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.