மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூரில் இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மணிப்பூர் மாநில முதல்-மந்திரி என் பிரேன் சிங் உடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், மணிப்பூரில் கலவரத்தின் போது இறந்தவர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக ஏற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.