கர்நாடகாவில் பள்ளிகளில் தினமும் 10 நிமிடம் கட்டாய‌ தியானம் - கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் 

November 4, 2022

கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் தினமும் 10 நிமிடம் தியானம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில், கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மாணவர்களால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. செல்போன், சமூக வலைதளங்கள், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். கவனச் சிதறல், படிப்பில் ஈடுபாடின்மை ஆகியவற்றால் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் விரக்தி, […]

கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் தினமும் 10 நிமிடம் தியானம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில், கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மாணவர்களால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. செல்போன், சமூக வலைதளங்கள், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். கவனச் சிதறல், படிப்பில் ஈடுபாடின்மை ஆகியவற்றால் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் விரக்தி, கோபம், ஆத்திரம் போன்ற மனநிலைக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை போக்க கல்வி நிபுணர்களிடம் அரசு கருத்து கேட்டிருந்தது.

இதனிடையே கர்நாடக மாநில தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம், மாணவர்களை நல்வழிப்படுத்த தினமும் தியானம் செய்ய தூண்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தினமும் வகுப்பில் 10 நிமிடங்கள் தியானம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தியானம் செய்தால் மாணவர்களின் மன நலம், உடல் ஆரோக்கியம், நற்சிந்தனை, மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் ஆகியவை மேம்படும். மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியும் என்று பி.சி.நாகேஷ் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu