பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமராக இருந்த சமயத்தில், பாகிஸ்தானின் ரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. இது தவிர, பரிசு பொருள் முறைகேடு, அல் கதிர் அறக்கட்டளை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கானின் நெருங்கிய கூட்டாளியும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவருமான குரேஷிக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.














