100 புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 100 புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்த தொழில் அதிபர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 100 புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளது.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்த தொழில் அதிபர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 7,400 வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ரூ.1,510 கோடி மதிப்பில் 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மொத்தத்தில் இன்றைய விழாவில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu