இந்த ஆண்டிற்கான உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நேற்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாநாட்டை தொடக்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இது 10 வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு ஆகும். இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. வணிகத்துறை சார்ந்த முக்கிய நபர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், அமைச்சர்கள் போன்றோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. பல்வேறு புதிய தொழில்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் நிகழ உள்ளன.