கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இதனை இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்த நிலையில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றம் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர்