சென்னையில் ஜூலை 7-ம் தேதி 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான் சாமுவேல் ஆகியோர் கூறுகையில், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9-ம் தேதி வரை நடத்த முதல்வரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மாநாட்டில் மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்று அவர்கள் கூறினர்.