காரைக்குடி அருகில் 124 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகமளிக்கும் விதமாக நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பதிவு இல்லாத இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிச் சென்றனர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனை நடத்தினர். அதில் 2 கிலோ எடையுள்ள 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர் இது சம்பந்தமாக ஐந்து பேரை பல்வேறு இடங்களில் இருந்து போலீசார் கைது செய்துள்ளனர்