நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற காரணங்களால் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்.
நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற காரணங்களால் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது. நிலச்சரிவுகளால் பொதுமக்களின் சொத்துக்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நிலச்சரிவில் சிக்கி எட்டு பேரும், மின்னல் தாக்கி ஐந்து பேரும், வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு ஒருவரும் உயிரிழந்து உள்ளனர். இரண்டு பேரை காணவில்லை. 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 28 பேர் பலியாகி உள்ளனர். நேபாளத்தில் 18 லட்சம் பேர் பருவகால மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படக்கூடும் என்று அரசு கூறியுள்ளது.