மக்களவையில் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்

December 15, 2023

பாராளுமன்ற மக்களவையில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்ற மக்களவையில் இருவர் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் காரணமாக அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து கூச்சல் நிலவி வந்ததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழக எம்.பி.களான […]

பாராளுமன்ற மக்களவையில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

பாராளுமன்ற மக்களவையில் இருவர் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் காரணமாக அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து கூச்சல் நிலவி வந்ததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழக எம்.பி.களான கனிமொழி, மாணிக்கம், தாகூர், வெங்கடேசன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததன் காரணமாக கனிமொழி உள்ளிட்ட பதினைந்து எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu