தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை காரணமாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மிலாடி நபி பண்டிகை வரும் 28ஆம் தேதியன்று கொண்டடபடுவதால் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சனி,ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி வருவதால் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை உள்ளதால் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வெளியூர்களுக்கு செல்வது அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளது. மக்கள் பயணம் அதிகரித்தலால் ஏற்படும் கூட்டு நெரிசலை தவிர்க்க நாளை முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக இயங்கும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 500 பஸ்கள் வீதம் மூன்று நாட்களுக்கு 1500 பேருந்துகள் சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.