தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமாகி வருகிறது. கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானால் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தகவல் தெரிவிக்கவில்லை என்றால் பொது சுகாதார சட்டம் 1936ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் தெரிவிக்காத மருத்துவர்கள் மீதும் சட்டபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.