ஜம்மு காஷ்மீரில் உள்ள பதால் கிராமத்தில் பரவி வரும் மர்ம நோயின் காரணத்தை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம், பதால் கிராமத்தில் பரவி வரும் மர்ம நோய் கடந்த 45 நாட்களில் 16 பேரின் உயிரை பறித்துள்ளது. இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் ஆகியவை உள்ளன. மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயின் காரணத்தை கண்டறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்களை கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு, ஜனவரி 19 அன்று பாதிப்பை ஆய்வு செய்ய உள்ளது. உயிரிழப்புகள் நியூரோ டாக்சின்களால் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.














