திமுக ஆட்சியில்16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனா தொற்று, இயற்கை பேரிடர் மற்றும் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் சீர்த்திருத்தங்களை அமல்படுத்தி, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி காட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியால் ஏற்றப்பட்ட வருவாய் பற்றாக்குறை 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.