பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க ஊழல் தடுப்பு அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் ரகசிய தகவல்களை கசியவிட்ட தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவாக இந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், டோஷ்கானா வழக்கில் தனது பதவி காலத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களை முறைகேடாக வழங்கிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.