மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 2 லட்சம் உதவித்தொகை - ஜார்கண்ட் அரசு

ஜார்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூபாய் 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்து கொள்ளும் விதவை பெண்களுக்கு உதவி தொகை வழங்க உள்ளதாக ஜார்கண்ட் மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலர் கூறுகையில், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் மிகவும் உதவும் என்பதால் இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விதவைகள் […]

ஜார்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூபாய் 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்து கொள்ளும் விதவை பெண்களுக்கு உதவி தொகை வழங்க உள்ளதாக ஜார்கண்ட் மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலர் கூறுகையில், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் மிகவும் உதவும் என்பதால் இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விதவைகள் தங்கள் திருமண பதிவு சான்றிதழ் உடன் விண்ணப்பிக்கலாம். மறுமணம் முடிந்த ஒரு வருடத்தில் அவர்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் இரண்டு லட்சம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu