வங்காளதேசத்தில் வெள்ளம் காரணமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
நாட்டின் வடக்கு பகுதி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தங்கும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வெள்ளத்திற்கு எட்டு பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசம் தொடர்ந்து பருவ மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சீரற்ற முறையில் மழை பொழிவு நடைபெறுகிறது. இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படுகிறது.
அதோடு வரும் நாட்களில் வடக்கு பகுதிகளில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் செயலாளர் கம்ரூன் ஹசன் கூறியுள்ளார்.