ஐரோப்பிய யூனியன் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து முதல் முறையாக ரூ.13,400 கோடி லாபத் தொகையை அனுப்பியுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா கூறுகையில், ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரைனுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து கிடைக்கும் லாபத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளோம். அதாவது 160 கோடி டாலரை உக்ரைனுக்கு அனுப்பி இருக்கிறோம். ரஷ்யாவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், போரினால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்தவும் இந்த தொகை பயன்படும். இதைவிட சிறந்த வேறு வழி இல்லை என்றார் அவர். இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.