டொனால்ட் டிரம்ப் ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த உத்தரவு

February 17, 2024

சொத்து மதிப்புகளை பொய்யாக உயர்த்தி காட்டி மோசடி செய்ததற்காக டொனால்ட் டிரம்ப் ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மோசடி, பாலியல் மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொழில் அதிபர் ஆன டிரம்ப் நிதி மற்றும் வங்கி அமைப்புகளிடம் கடன் பெற தனது சொத்து மதிப்புகளை பொய்யாக உயர்த்தி காட்டி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. […]

சொத்து மதிப்புகளை பொய்யாக உயர்த்தி காட்டி மோசடி செய்ததற்காக டொனால்ட் டிரம்ப் ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மோசடி, பாலியல் மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொழில் அதிபர் ஆன டிரம்ப் நிதி மற்றும் வங்கி அமைப்புகளிடம் கடன் பெற தனது சொத்து மதிப்புகளை பொய்யாக உயர்த்தி காட்டி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. எனினும் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்நிலையில், நிதி மோசடி வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி ஆர்தர் அளித்த தீர்ப்பில், கடன் பெற சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( ரூ.3 ஆயிரம் கோடி) செலுத்த வேண்டும் என்று அபராதம் விதிக்கிறேன். மேலும் நியூயார்க் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கிறேன் என்று அறிவித்தார்.

இந்த வழக்கில் ட்ரம்பின் மகன்கள் எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கு தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய உள்ளதாக ட்ரம்ப் ஆதரவு வழக்கறிஞர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu