3 மாதத்துக்குள் சொத்து வரி செலுத்தினால் 20 சதவீதம் வரி சலுகை

March 29, 2023

5 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால் 20 சதவீதம் வரி சலுகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று முன்தினம் மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 44,436 சொத்துடமைதாரர்கள் ரூ.245 கோடி வரி நிலுவை வைத்துள்ளனர். இதில் […]

5 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால் 20 சதவீதம் வரி சலுகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று முன்தினம் மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 44,436 சொத்துடமைதாரர்கள் ரூ.245 கோடி வரி நிலுவை வைத்துள்ளனர். இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் மாநகராட்சிக்கு வரி நிலுவைத் தொகை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது.

இதன் காரணமாக, ஒரு முறை சிறப்பு நிகழ்வாக 5 ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி நிலுவைத் தொகை வைத்துள்ளவர்கள் 3 மாதகாலத்துக்கு நிலுவைத் தொகை செலுத்தினால் 20 சதவீதம் வரை வரிச் சலுகை வழங்குவது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu