டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. அதனை தொடர்ந்து 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் டி 20 தொடரில் தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்