பொதுப்பிரிவுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது, நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு பிரிவுகளுக்கான நேரடிக் கலந்தாய்வுகள் மாதவரத்தில் நடைபெறவுள்ளன.
2025–26 கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. நாளை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். அதற்குப் பின்னர், நாளை மறுநாள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் அதே இடத்தில் நேரடியாக நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களுக்கான நாளில் நேரத்தைத் தவறவிடாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.