ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழா திரையரங்குகளில் நேரலை ஒளிபரப்பு

முதல் முறையாக திரையரங்க வரலாற்றில் ஈஷா மகா சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மகா சிவராத்திரி விழா வருகிற 8ம் தேதி ஈஷாவில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவானது பிவிஆர், ஐநாக்ஸ் ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா உள்ளிட்ட 35 பெரு நகரங்களில் மகா சிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா 8ம் […]

முதல் முறையாக திரையரங்க வரலாற்றில் ஈஷா மகா சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மகா சிவராத்திரி விழா வருகிற 8ம் தேதி ஈஷாவில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவானது பிவிஆர், ஐநாக்ஸ் ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா உள்ளிட்ட 35 பெரு நகரங்களில் மகா சிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா 8ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும் இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தண்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் சங்கர் மகாதேவன்,குருதாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், உள்ளிட்ட இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை pvr-mahasivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிவராத்திரி விழாவானது தமிழ்நாட்டில் கோவையை தவிர்த்து 36 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கொண்டாடப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu