2026 உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா பொலிவியாவை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
2026 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிசுற்றின் ஆட்டத்தில், அர்ஜெண்டினா 6-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவைத் தோற்கடித்தது. இதில் லியோனல் மெஸ்சி, காயத்துக்குப் பிறகு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3 கோல்களை அடித்தார். இவர் 19, 84 மற்றும் 86-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மற்ற வீரர்கள், மார்ட்டினஸ், ஜூலியன் அல்வா ரெஸ் மற்றும் தியோகோ அல்மடா, தலா 1 கோல் அடித்து, அர்ஜெண்டினாவின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், அர்ஜெண்டினா 22 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது, பிரேசில் 16 புள்ளிகள் கொண்ட 4-வது இடத்தில் உள்ளது.














