சுற்றுலா விசாவில் வந்து சட்ட விரோத செயல் - இலங்கையில் 21 இந்தியர்கள் கைது

March 15, 2024

இலங்கையில் 21 இந்தியர்கள் சுற்றுலா விசாவில் வந்து சட்ட விரோதமாக ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் சுற்றுலா விசாவில் வரும் மக்கள் சம்பளம் பெற்றோ, பெறாமலோ வேலை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 இந்தியர்கள் சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்துள்ளதால் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 24 முதல் 25 வயது வரை உள்ளது என கூறப்பட்டுள்ளது. இவர்கள் நீர் கொழும்பு நகரில் உள்ள […]

இலங்கையில் 21 இந்தியர்கள் சுற்றுலா விசாவில் வந்து சட்ட விரோதமாக ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா விசாவில் வரும் மக்கள் சம்பளம் பெற்றோ, பெறாமலோ வேலை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 இந்தியர்கள் சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்துள்ளதால் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 24 முதல் 25 வயது வரை உள்ளது என கூறப்பட்டுள்ளது. இவர்கள் நீர் கொழும்பு நகரில் உள்ள ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் மார்க்கெட்டிங் சென்டர் நடத்தியதாகவும், கம்ப்யூட்டர் மற்றும் தேவையான தொழில்நுட்ப சாதனங்களை பொருத்தி அந்த வீட்டை அலுவலமாக மாற்றியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி ஆக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுற்றுலா விசா விதிமுறைகள் மார்ச் 31ஆம் தேதி வரை தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கட்டணம் இன்றி விசா வழங்கப்பட்டு வருகிறது .கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் வெலிசராவில் உள்ள குடிவரவு துறை தடுப்பு மையத்திற்கு மாற்றப்படுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu