சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 21 அரசுப் படையினா் பலி

November 9, 2023

சிரியாவில் அதிபர் அல் ஹசாத் அரசுக்கு ஆதரவான ஆயுதப்படையை சேர்ந்த 21 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். சிரியாவில் ராக்கா நகருக்கும் ஹாம்ஸ் நகருக்கும் இடையில் உள்ள பாலைவனப் பகுதியில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு படையினர் மீது கடந்த செவ்வாய் இரவு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அரசுக்கு ஆதரவான ஆயுதப்படையை சேர்ந்த 21 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. […]

சிரியாவில் அதிபர் அல் ஹசாத் அரசுக்கு ஆதரவான ஆயுதப்படையை சேர்ந்த 21 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர்.
சிரியாவில் ராக்கா நகருக்கும் ஹாம்ஸ் நகருக்கும் இடையில் உள்ள பாலைவனப் பகுதியில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு படையினர் மீது கடந்த செவ்வாய் இரவு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அரசுக்கு ஆதரவான ஆயுதப்படையை சேர்ந்த 21 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 34 ஆயுதப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் அரசு படையினருக்கும் அமெரிக்க அதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இந்த போரின்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் கணிசமான பகுதிகளை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டு போரில் சுமார் 4.7 லட்சம் முதல் 6.1 லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த போரில் ரஷ்யாவின் உதவியுடன் ஈராக் அரசின் ராணுவம் சுமார் 64 சதவீத நிலப்பரப்பை மீட்டது. குர்து படையினரின் கட்டுப்பாட்டில் சுமார் 26 சதவீத பரப்பளவு நிலம் உள்ளது. அமெரிக்க ஆதரவுகளைச் சார்ந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் துருக்கி வசம் சுமார் 10 சதவீத நிலப்பரப்பு உள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் குறிப்பிடும்படியாக ஆட்சி பகுதி இல்லை. இருந்தபோதும் அந்த அமைப்பினர் அவ்வப்போது பதுங்கி இருந்து ரகசியமாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu