டிசிஎஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளன. அதனை ஒட்டி, தனது பங்குகளை திரும்பப் பெறும் அறிவிப்பையும் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை டிசிஎஸ் திரும்ப பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதால், நேற்று டிசிஎஸ் பங்குகள் ஒரு வருட உச்சத்தை எட்டின. ஆனால், இன்று பங்குகள் சற்று சரிந்து வர்த்தகம் ஆயின.டிசிஎஸ் திரும்ப பெற உள்ள பங்குகளின் மதிப்பு 22620 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 25% ஆகும். மேலும், இதுவரை டிசிஎஸ் நிறுவனம் பங்குகளை திரும்ப பெற்ற நடவடிக்கைகளில், இதுவே அதிக தொகை உள்ள திரும்பப் பெறும் நடவடிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாயை சீர் செய்ய இந்த பங்குகளை டிசிஎஸ் நிறுவனம் திரும்ப பெறுவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.