கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 கடன் செயலிகள் நீக்கம்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சைபர் கிரைம் பிரிவு தொடர்ந்து சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக அதிகாரிகளை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் குறித்து அவதூறாக பேசி வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை முடக்கக் கோரி யூடியூப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்களை தொடர்ந்து தற்கொலை செய்ய தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் 221 […]

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சைபர் கிரைம் பிரிவு தொடர்ந்து சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக அதிகாரிகளை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் குறித்து அவதூறாக பேசி வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை முடக்கக் கோரி யூடியூப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் பொதுமக்களை தொடர்ந்து தற்கொலை செய்ய தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.பி.ஐ. அனுமதி பெறாத மேலும் 61 கடன் செயலிகளை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu