கேரள மாநிலம் வாயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 24 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவின் காரணமாக பல வீடுகள் முற்றாக அழிந்துள்ளன மற்றும் அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 340 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று மீட்பு பணி நடைபெற்று வருகிறது.














