இந்தியாவில் செப்டோ மூலம் ரூ.25 கோடி மதிப்பிலான மாம்பழங்கள் விற்பனை

இந்தியாவில் கடந்த ஏப்ரலில் செப்டோ ( Zepto) மூலம் ரூ.25 கோடி மதிப்பிலான மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கோடை காலங்களில் மாம்பழ விற்பனை அதிகரிக்க தொடங்கும். சாலையோர கடைகள், சந்தை, பல்பொருள் அங்காடி மட்டுமல்லாது டெலிவரி செயலிகள் மூலமாகவும் மாம்பழ விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில் 10 நிமிடத்தில் பலசரக்கு டெலிவரி செய்யும் செப்டோ (Zepto) செயலியில் மட்டுமே கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு மாம்பழம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாம்பழ […]

இந்தியாவில் கடந்த ஏப்ரலில் செப்டோ ( Zepto) மூலம் ரூ.25 கோடி மதிப்பிலான மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோடை காலங்களில் மாம்பழ விற்பனை அதிகரிக்க தொடங்கும். சாலையோர கடைகள், சந்தை, பல்பொருள் அங்காடி மட்டுமல்லாது டெலிவரி செயலிகள் மூலமாகவும் மாம்பழ விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில் 10 நிமிடத்தில் பலசரக்கு டெலிவரி செய்யும் செப்டோ (Zepto) செயலியில் மட்டுமே கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு மாம்பழம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாம்பழ விற்பனையில் அல்போன்சா 30 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் விளைவிக்கப்படும் பங்கனபள்ளிக்கு தென் மாநில நகரங்களில் டிமாண்ட் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாம்பழ விற்பனைக்காக நாடு முழுவதும் உள்ள சுமார் 1,000 விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக செப்டோ (Zepto) தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu